முட்டை விலை உயர்வால் எதிர்காலத்தில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் முட்டை விலையை குறைக்க அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தலையிட்டால் பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும் பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவினாலும் குறைக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல நாட்டில் முட்டை விலையை 30, 35 ரூபாவிற்கு விற்க முடியும் எனினும், 60 ரூபாவிற்கு விற்கின்றார்கள். இது முட்டை மாபியா. இந்தியாவின் தமிழ்நாட்டில் முட்டையொன்றின் விலை 18 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.
எனவே அங்கிருந்து முட்டை இறக்குமதி செய்தாலும் விலை குறைந்த விலைக்கு விற்கமுடியும் எனவே இதற்கு அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.