தனது 5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்யப் போவதாக மனைவிக்கு மிரட்டல் விடுத்த தந்தை ஒருவரை குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த தனது மனைவியை அழைத்து வரும் நோக்கில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த காணொளியை சந்தேக நபர் தனது மனைவிக்கும் மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தந்தையின் ஆபத்தான செயலால் குழந்தை எப்படி மிகவும் பயந்துள்ளது என்பதை வீடியோ காட்டுகிறது.
சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து குளியாப்பிட்டிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து குழந்தையை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.
குழந்தை தந்தையுடன் செல்ல மறுத்துள்ளதுடன், தாய் வரும் வரை தனது உறவினருடன் செல்ல விரும்புவதாகவும் குழந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.