ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை அதிகரித்து வருகின்றது: வஜிர

Date:

2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மக்கள் குப்பைத் தொட்டியில் வீசாமல் இருந்திருந்தால் நாடு இவ்வாறு குப்பைத் தொட்டியில் வீழ்ந்திருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், ஊர் ஊராக விநியோகிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தை மீண்டும் வாசிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இணையான தலைவர் உலகில் வேறு எவருக்கும் இல்லை ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கினால் நிச்சயமாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடயங்களை ஒவ்வொன்றாக செய்து வருவதாகவும் அதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை ஒவ்வொரு நொடியும் அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டார்.

இன்று ரணில் விக்கிரமசிங்க ஒரு தேசிய பொக்கிஷமாக மாறியுள்ளதாகவும், ஆசியாவில் இலங்கையை உயர்ந்த இடத்திற்கு உயர்த்த தேசிய பொக்கிஷம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...