10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க நேரிடும்: சம்பிக்க எச்சரிக்கை!

Date:

செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து இரண்டரை மில்லியன் தொன் நிலக்கரி கொண்டுவர முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் 10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பொரலஸ்கமுவ 43 ஆவது படையணி காரியாலலயத்தல் புதக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையல்,

மின்சாரசபையினால் தற்போது மேற்கொண்டுவரும் மின் துண்டிப்பு நேரம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் நிலையே இருந்து வருகின்றது.

அதனை கட்டுப்படுத்த எந்தவித முறையான நடவடிக்கையும் மேற்கொள்வதை காணும் தூரத்துக்கு இல்லை. குறிப்பாக நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரி கொண்டுவரும் நடவடிக்கை இடம்பெறுகின்றதா என தெரியாது.

செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து நிலக்கரி மின் உற்பத்திக்கு தேவையான இரண்ரை மில்லியன் தொன் (25இலட்சம்) நிலக்கரி முறையாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் தற்போது நாங்கள் முகம்கொடுத்துவரும் 3மணி நேர மின் துண்டிப்பு 10மணி நேரத்துக்கும் அதிக நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படும்.

அத்துடன் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டுவரை நிலக்கரி கொண்டுவர மின்சக்தி அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு சில மாதங்களுக்கேனும் தேவையான நிலக்கரி கொண்டுவர டொலர் இல்லை என தெரிவிக்கும் இவர்கள், ஒரே தடவையில் 2025 ஆம் ஆண்டுவரை எந்த அடிப்படையில், எந்த செயற்பாட்டின் ஊடாக நிலக்கரி கொண்டு வரப்போகின்றார்கள் என்பது எமக்கு சந்தேகமாக இருக்கின்றது.

அதனால் முறையான திட்டத்தின் கீழ், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு செலாவணிக்கு தாங்கிக்கொள்ள முடியுமான வகையில் நிலக்கரி கொண்டுவரும் நடவடிக்கையை மேற்கொள்ள தவறியதால், தற்போது பாரிய பிரச்சினைக்கு ஆளாகி இருக்கின்றது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்தும் இவ்வாறே முறைகேடான வகையில் முன்னெடுத்தால், எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான விடயங்களுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படும்.

ஏனெனில் நிலக்கரி மின் உற்பத்தி இல்லாமல் போனால் 10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்றார்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...