சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: அவசர நிலை பிரகடனம்!

Date:

கொளுத்தும் வெப்பநிலைக்கு மத்தியில் சீனா முதல் தேசிய வறட்சி அவசரநிலையை அறிவித்தது.

சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக  கடந்த சனிக்கிழமை அன்று பல மாகாணங்களில் நான்கு அடுக்கு எச்சரிக்கையான சிவப்பு நிற எச்சரிக்கையை சீனாவின் வானிலை மையம் விடுத்துள்ளது.

சீனாவில் கன்சு, ஷான்சி, ஹெனான், அன்ஹுய் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெப்ப நிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஷான்சி, சிச்சுவான், சோங்கிங், ஹூபே, ஹுனான், அன்ஹுய், ஜியாங்சி மற்றும் ஜெஜியாங் பகுதிகளில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெப்பநிலையை எதிர்கொள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மக்களை தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்றும் தீ விபத்துகள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் பல மாகாணங்களில் 35 டிகிரி செல்சியஸ் தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...