சர்வதேச நாணய நிதியத்தின் உதவி எப்போது கிடைக்கும்: மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்ட நம்பிக்கை பதில்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை பெற எதிர்பார்க்கப்படும் கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Bloomberg அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,
கேள்வி – உங்களுக்கு IMFக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா? உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இல்லாமல் கடன் நிலைத்தன்மையை அடைய முடியும்?
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க
“உண்மையில் நாம் சர்வதேச நாயண நிதியத்துடன் கலந்துரையாடி வருகிறோம். அதன் முதல் படி, அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பில் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதாகும். அதற்கு நாங்கள் மிக நெருக்கமாக இருக்கிறோம் என்று கூறலாம். உள்நாட்டு கடன் இலக்குகளை அடைவதில் எந்த சிக்கலையும் நாங்கள் காணவில்லை. இதனால் உள்நாட்டு கடனை மறுசீரமைக்காமல் நிலைமையை நிர்வகிக்க முடியும்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...