22வது அரசியல் யாப்பு திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணை முடிவு: சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்!

Date:

அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களின் விசாரணையை இலங்கை உயர் நீதிமன்றம் நேற்று முடித்துக்கொண்டது.

இதனையடுத்து உயர்நீதிமன்றின் தீர்மானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நீதியரசர்களான புவனேகா அலுவிஹார மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இரண்டாவது நாளாக நேற்றும் இடம்பெற்றது.

வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு உள்ளிட்ட ஒன்பது பேரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனுக்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமானால் அதனை நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்ற வேண்டும் என்று மனுக்களில் கோரப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...