124 இலங்கையர்கள் கொண்ட குழுவொன்று நேற்று இரவு தென்கொரியாவிற்குப் புறப்பட்டுச் சென்றது.
அதற்கமைய இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உற்பத்தித் துறையில் வேலைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உற்பத்தித் துறையில் அதிகளவிலான தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப முடியும் என்ற போதிலும், கடந்த காலங்களில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்பு குறைவாகவே இருந்தது.
கொரிய மனிதவளத் துறையின் நாட்டு இயக்குநர் லீயுடன் இது குறித்து விவாதித்தேன் என்று அமைச்சர் கூறினார்.
இதன்படி எதிர்காலத்தில் மீன்பிடித் துறையில் 1047 வேலை வாய்ப்புகளை இலங்கை பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி தொழில் துறைக்கான பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவித்த அமைச்சர், அதற்கான விண்ணப்பங்களை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையிலிருந்து தென் கொரியாவுக்கு செல்லும் 732 வது குழு இதுவாகும்.