டீசல் தட்டுப்பாடு காரணமாக சுமார் 50 சதவீதமான தனியார் பஸ்கள் இன்று (26) இயங்காது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நேற்றைய தினம் தனியார் பேருந்துகள் டீசலில் இயக்கப்பட்டதாக தெரிவித்த கெமுனு விஜேரத்ன, இன்று டீசல் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளினால் இன்று 50 வீதமான பேருந்து ஓட்டங்கள் குறையும் சில நாட்களாக டீசல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வாரத்தில் தொடர்ச்சியான பேருந்து சேவையை வழங்குவதற்கு இந்த வார இறுதியில் போதுமான டீசல் இருப்புக்கள் பெறப்பட வேண்டும்.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் சில டிப்போக்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக சில தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.