ஜனாதிபதியினால் மன்னிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வந்த பின்னர் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று ஆசி பெற்றார்.
கங்காராம விகாரையின் பணிப்பாளர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஆசி வழங்கினார்.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கலந்துகொண்டனர்.