கடந்த மே மாதம் 10ஆம் திகதி மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் மேலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் நேற்று (29) பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக முற்றுகையிடல், சட்டவிரோதமான கூட்டத்தை சேர்ந்தவர்கள், ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, குற்றவியல் நிர்ப்பந்தம் மற்றும் கடமையைத் தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31, 51 மற்றும் 52 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரும் பிடபெத்தர மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.