சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்க அரசு ஆதரவளிக்கும்: அமெரிக்க தூதுவர்!

Date:

உடன்படிக்கை எட்டப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின்  மூலம் இலங்கைக்கு  ஐக்கிய அமெரிக்க அரசு ஆதரவளிக்கும் என்று இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  நிதியுதவி, விவசாயிகளுக்கான உரம் மற்றும் விதைகள், கல்வி பரிமாற்றம் மற்றும் பொது நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான பயிற்சி போன்ற தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா இரட்டிப்பாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை, அமெரிக்க வர்த்தக சபையில் இடம்பெற்ற நிகழ்வில்  அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
அமெரிக்க-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மூலம் ஏற்கனவே 180,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்ககளினால் இலங்கை பொருளாதாரத்திற்கு பில்லியன்களை பங்களிக்கின்றனர்  என்று அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...