முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமையடுத்து அது தொடர்பான ஆவணங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஞ்சன் ராமநாயக்கவின் எதிர்காலம் தொடர்பில் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கிரியெல்லவுக்குப் பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அதற்கான ஆவணங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
நடிகரும், அரசியல்வாதியும், ராஜபக்ஷ குடும்பத்தின் தீவிர விமர்சகருமான இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைப் பெற்றார்.
2017 இல் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக 2021 இல் அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதேவேளை அவர் விடுதலையானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்திதலைவருமான சஜித் பிரேமதாச, பாராளுமன்றக் குழு மற்றும் மத்திய குழுவில் உறுப்பினராக ஆக்கப்படுவார் என்றும், அது கிடைக்கப்பெற்றவுடன் நாடாளுமன்றத்தில் ஆசனத்தை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.