சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (30) கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் சபையின் தலைவர் Peter Breuer, பிரதித் தலைவர் Masahiro Nozaki, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்நாட்டின் நிரந்தரப் பிரதிநிதி Tubagus Feridhanusetyawan, ஆகியோருடனேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஈரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், நிரோஷன் பெரேரா மற்றும் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...