ஆளும் கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி பக்கம் சென்றனர்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர நடவடிக்கை எடுத்தனர்.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று (ஆகஸ்ட் 31) முதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேட்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமண, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் குணபால ரத்னசேகர, கலாநிதி உபுல் கலப்பட்டி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயண கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார. குமாரசிறி மற்றும் 12 எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்.

2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 31) காலை ஆரம்பமாகவுள்ளது.

Popular

More like this
Related

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...