ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 21 பேர் உயிரிழப்பு, 21 பேர் படுகாயம்!

Date:

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையின் போது இன்று (02) இடம்பெற்ற வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

தற்கொலை குண்டுதாரி இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

தலிபான் அமைப்பின் முக்கிய உறுப்பினரான முஜிப் அன்சாரியை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஹெராத் நகரில் உள்ள குசர்கா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை இன்று (செப். 2) மதியம் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த வாரம், இஸ்லாமியர்கள் அங்கு சிறப்புத்தொழுகை மேற்கொண்டு வந்ததால், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 21 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஹெராத் நகரின் அவசர உதவி மையத்தைச் சேர்ந்த அலுவலர், முகமது தாவூத் முகமதி தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தாலிபன் அலுவலர்கள் உறுதிப்படுத்திய நிலையில், உயிரிழப்புகள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. இதற்கு முன்னர், ஆப்கனில் தாலிபன்களை குறிவைத்து பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று வந்தன.

குண்டுவெடிப்பு நடைபெற்ற பள்ளிவாசலில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் தொழுகை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் ஆதிக்கம் வாய்ந்தவர்களாக சன்னி இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். தாலிபன்களும், ஐஎஸ் அமைப்பினரும் சன்னி இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபன்கள் ஆப்கானை கைப்பற்றியதில் இருந்து ஐஎஸ் அமைப்பு, பல்வேறு பள்ளிவாசல்களின் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டுவெடிப்பு சம்பவங்களையும், தற்கொலைப்படை தாக்குதல்களையும் நிகழ்த்தியுள்ளன

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...