ஆசிய கிண்ண கிரிக்கட் சுப்பர் 4 சுற்று இன்று ஆரம்பம்!

Date:

ஆசியக் கிண்ண 20 க்கு 20 தொடரில் A குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

ஹொங்கொங் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, 155 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

சார்ஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங்கொங் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஹொங்கொங் அணி 10.4 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

இன்றைய தினம் சுப்பர் 4 சுற்று ஆரம்பிக்கவுள்ளது.

இந்தச் சுற்றின் முதலாவது போட்டியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

சார்ஜாவில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 க்கு ஆரம்பமாக உள்ளது.

முன்னதாக குழுநிலையில் இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டிருந்தது.

இதேவேளை ஆசியக் கிண்ண 20 க்கு 20 தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...

பெலாரஸில் அதிரடி: தன்பாலின ஈர்ப்பை ஆதரிப்பது இனி கிரிமினல் குற்றம்!

பெலாரஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவாகப் பேசுவது...

இலங்கைக்கான எண்ணெய், சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார...