சீரற்ற காலநிலையால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.

அவர்களின் அறிக்கையின்படி, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, கிழக்கு, வடகிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,214 பேர்.

இரத்தினபுரி மற்றும் குருநாகல் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளத்தினால் 95 வீடுகள் பகுதியளவிலும் இரண்டு வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, களுகங்கை, கூடு கங்கை மற்றும் மகுரு கங்கை உப வடிநிலங்களின் மேல் நீரோடைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...