ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் இந்திய அணியுடனான போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த வெற்றியின் ஊடாக இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு இலங்கை அணிக்கு பிரகாசமாகியுள்ளது.
இந்திய அணியின் ஆசியக் கிண்ண கனவு கலைந்துள்ளது.
ஒரு வேளை எதிர் வர உள்ள போட்டிகளில் இலங்கை தவிர்த்து மற்ற அணிகள் சமமான புள்ளிகள் பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் அதி கூடிய ரன் ரேட்டை பெற்றால் மாத்திரமே இந்தியாவுக்கு இறுதி ஆட்டத்திற்கு செல்ல முடியுமான நிலை ஏற்பட்டுள்ளது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் தில்சான் மதுசங்க 3 விக்கட்டுக்களையும் தசுன் சானக்க 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 57 ஓட்டங்களை பெற்றார்.