உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் அழைப்பு!

Date:

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்காத குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு காலை இழந்த தந்தை சிறில் காமினி மற்றும் யேசுராஜ் கணேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தனிப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நீதிமன்றில் முன்னிலையானார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்தும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைக்காகவும், பாதுகாப்பு அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிமன்றில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...