துடுப்பாட்ட வீரர் தசுன் ஷனக்க மற்றும் அவரது குழுவினர் ஆசிய கிண்ணத்திற்கு முன்னேறுவதற்கு பலமாக கடந்த கால தோல்விகளை பயன்படுத்தினர் எனவும், ஒரு நாடாக நாம் இவ்வாறு சிந்தித்தால், உலகத்தின் முன் இலங்கை வெற்றி பெறுவது கடினமான விடயமல்ல எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு அணியாக இணைந்து செயற்பட்டமை இலங்கை ஆசிய சம்பியன்களின் வெற்றிக்கு பங்களித்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
2020 ஆசியக் கிண்ண கிரிக்கட் சம்பியன்ஷிப் மற்றும் பன்னிரண்டாவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இலங்கை அணிகளை கௌரவிக்கும் நிகழ்வில் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆசிய சம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு இலங்கை கிரிக்கெட் சங்கம் தனது ஆதரவை அடையாளப்படுத்தியது.
ஒரு வீராங்கனைக்கு தலா 02 மில்லியன் ரூபாவும், இரண்டு பயிற்சியாளர்களுக்கு தலா 02 மில்லியன் ரூபாவும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
பிரித்தானியாவின் பர்மிங்ஹாமில் அண்மையில் நடைபெற்ற 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்காக 4 பதக்கங்களை வென்ற வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
தாய்நாட்டை ஆசியாவின் உச்சத்திற்கு உயர்த்திய அனைத்து விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தாய்நாட்டை ஆசியாவின் உச்சத்திற்கு உயர்த்திய அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, விளையாட்டில் அரசியலில் பங்கு பெற்ற காலத்தை தாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், இம்முறை வெற்றியின் 200% சகலருக்கும் சொந்தம் எனவும் குறிப்பிட்டார்.