இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

Popular

More like this
Related

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான...

இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6, 1992...

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்.

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன்...

அனர்த்தங்களினால் பாதிப்புகளுக்குள்ளான சீரமைக்கப்படும் ரயில் மார்க்கம்

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளான மலைநாட்டு ரயில்...