அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

Date:

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த விலை குறைப்பு 22 முதல் வரும் 30ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ வெள்ளை சீனி 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

185 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 14 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியை 9 ரூபாயால் குறைத்து நுகர்வோருக்கு வழங்க சதொச கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...