ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (27) பொழும்பு மத்திய குற்ற விசாரணை பிரிவினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதான நபர்களை கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.
கைதான சந்தேகநபர்கள் 22, 40 மற்றும் 55 வயதுடைய அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.