இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு வானமே எல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) மற்றும் இலங்கைக்கு இடையிலான பங்காளித்துவத்தின் 58வது கொண்டாட்டத்தில் உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.
ஒட்டுமொத்த இந்திய-இலங்கை ஒத்துழைப்பில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் (ITEC) முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் ITEC வலையமைப்பு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதாகவும் ஒவ்வொரு வருடமும் 400 புலமைப்பரிசில்களை வழங்குவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
Celebrating 58 years of partnership between #India and #SriLanka in capacity building & skill development. @IndiainSL celebrated #ITECDay 2022 with the participation of a large number of @ITECnetwork alumni and senior officials from #lka, who shared their experiences.(1/3) pic.twitter.com/Qb84cprv8Y
— India in Sri Lanka (@IndiainSL) September 29, 2022