உலகலாவிய ரீதியில் சுமார் 55இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றவுள்ள துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி இன்று (01) சனி ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியில் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி முஹம்மத் நன்சீர் அமாரா ஸைனப் பங்குபற்றவுள்ளார்.
எனவே இம் மாணவி சிறந்த முறையில் தனது திறமைகளை அப் போட்டியில் வெளிப்படுத்த மனதில் தைரியத்தையும், நாவில் தெளிவையும் அல்லாஹ் வழங்க வேண்டும்.
அத்தோடு, சிறந்த பெறுபேற்றை பெற்று, பாதுகாப்பாக பெருமையுடன் தாய் நாடு வந்தடைய வேண்டும் என ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துக்கின்றோம்.