பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்க நடவடிக்கை!

Date:

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பெரும்போகத்தில் நெற்செய்கை மற்றும் ஏனைய விவசாய பயிர்ச் செய்கைக்குத் தேவையான சேதன மற்றும் இரசாயன உரங்களை வழங்குவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, விவசாயிகள் எவ்வித சந்தேகமுமின்றி அடுத்த பெரும்போகத்தில் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட அரசாங்க அதிகாரிகள், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் இந்திய கடன் திட்டத்தின் பிரதிநிதிகள், உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...