ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு பலம் வாய்ந்தது.
அரசுகளின் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து அதனை சமாளிப்பது இலங்கைக்கு கடினமாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இருந்து ஜூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 47 உறுப்பினர்களில் சுமார் 30 பேர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.