“பொன்னியின் செல்வன்” நூலின் அட்டையில் நடிகைகள் படம்: வாசகா்கள், பதிப்பாளா்கள் மத்தியில் அதிருப்தி!

Date:

பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், பாரம்பரியமாக இடம் பெற்று வந்த வரைபடங்களை மாற்றி திரைப்பட நடிகைகளின் படங்கள் இடம் பெற்றிருப்பது வாசகா்கள், பதிப்பாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சோழா்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நாவலாசிரியா் ‘கல்கி’ கிருஷ்ணமூா்த்தி, கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புதினம் பொன்னியின் செல்வன். இந்தப் புதினத்தை மையமாகக் கொண்டு இயக்குநா் மணிரத்னம் உருவாக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 8 நாள்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் படம் வெளியானது முதல், பொன்னியின் செல்வன் புதினம் இளைய தலைமுறையினரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக, கடந்த சில வாரங்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாக்களில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட புத்தகங்கள் வரிசையில் பொன்னியின் செல்வன் முதலிடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், இலக்கிய களம் சாா்பில் நடைபெறும் 9 ஆவது புத்தகத் திருவிழா கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 17இற்கும் மேற்பட்ட அரங்குகளில் பொன்னியின் செல்வன் புதினம் இடம் பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் நூலின் அட்டையில், திரைப்பட நடிகைகளின் படங்கள் அதில் ஒரு பதிப்பகத்தின் சாா்பில் வெளியாகியிருக்கும் புத்தகத்தின் அட்டையில், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வா்யா ராய் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. விற்பனை உத்திக்கான இந்த மாற்றம், வாசகா்கள், சக பதிப்பாளா்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகளின் விளம்பரத்தில் விற்பனை செய்ய வேண்டிய புத்தகமல்ல பொன்னியின் செல்வன். வாசிக்கும்போது எழுத்துகள் மூலம் குந்தவை நாச்சியாா், நந்தினி ஆகியோரின் பேரழகும், ஆளுமையும் வாசா்களுக்கு கிடைக்க வேண்டும். அட்டைப் படத்தில் நடிகைகள் உள்ளதால், அவா்களை ஒப்பிட்டு வாசிக்க வேண்டிய நிா்பந்தம் வாசகா்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்...

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...