2,500 மெற்றிக் டன் உரம் எப்போது நாட்டை வந்தடையும்? விவசாய அமைச்சர்!

Date:

உலக வங்கியின் ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்படுகின்ற 12 ஆயிரத்து 500 மெற்றிக் டன் உரம், எதிர்வரும் 10 நாட்களுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரத் தொகைக்கு மேலதிகமாக இந்த உரம் கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்போகத்துக்கு தேவையான ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை விவசாய அமைச்சு முன்னதாக ஆரம்பித்தது.

இதன்படி, பெரும் போகத்துக்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக கோரப்பட்டிருந்த முதலாவது விலை மனு தோல்வியடைந்தமையை அடுத்து இரண்டாவது விலை மனுவுக்காக மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...