முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையில் இன்று (ஒக்டோபர் 12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை எவ்வாறு மீள்வது மற்றும் இலங்கை எவ்வாறு பொருளாதாரம் மற்றும் சூழலியலை ஒன்றிணைத்து நாடுகளின் சவால்களுக்கு பசுமையான தீர்வுகளை காண முடியும் என்பது குறித்து நாங்கள் கலந்துரையாடியதாக அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Met with former president and prime minister Mahinda Rajapaksa in Colombo, Sri Lanka 🇱🇰.
We discussed how Sri Lanka can get out of the economic crisis and how Sri Lanka can combine economy and ecology to find green solutions the nations challenges. pic.twitter.com/jsNZFLaoOv
— Erik Solheim (@ErikSolheim) October 12, 2022