புத்தளத்தில் திருமணத்திற்கு முன்னரான வழிகாட்டல் பயிற்சி பட்டறை

Date:

கடந்த சில வருட முயற்சியின் திருவினையாக, “ஆனந்தமான திருமணத்தை நோக்கி ஒரு படி” எனும் தொனிப்பொருளில்  அண்மையில் “திருமணத்திற்கு முன்னரான வழிகாட்டல் பயிற்சி பட்டறை” இடம்பெற்றது.

புத்தளம் பெரியபள்ளி மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டுதலின் கீழ், இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அஷ்ஷேக் M.N. AALIF ALI (B.A. IHRDP – PAKISTAN, PSYCHOLOGICAL COUNCELOR) அவர்களால் புத்தளம் பெரியபள்ளி வாயிலில் நடாத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் பயிற்சி பட்டறையை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ் வைபவமும், விஷேட வளவாளருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முக்கியமாக இதில் அண்மையில் திருமணமானவர்கள் மற்றும் திருமணம் முடிக்க இருக்கின்ற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அற்பமான காரணங்களுக்காக  விவாகரத்துக்கு நாடிச் செல்லும் திருமண உறவுகளை கட்டிக் காக்க, திருமண வாழ்க்கை தொடர்பான தெளிவான வழிகாட்டல்களை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.

எமது உயரிய இலக்காக, “இது போன்ற பயிற்சி பட்டறையை முடித்ததன் பின்பே திருமண வாழ்க்கையில் நுழைய வேண்டும்” எனும் மனப்பதிவு திருமணம் முடிக்க தயாராக இருக்கும் ஒவ்வொரு இளைஞன், யுவதிக்கும் வரவேண்டும் என்பதுதான்.

இறுதியாக ஆலோசனைகளை வழங்கிய புத்தளம் பெரியபள்ளி மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, சமூகத்தலைமைகள் மற்றும் நலன் விரும்பிகள் இது போன்ற உதவி ஒத்தாசைகளை இனிவரும் காலங்களிலும் இது போன்ற செயற்பாடுகளுக்கு வழங்க முன்வருவீர்கள் என எதிர்ப்பார்க்கிறோம்  என camo volunteer அமைப்பு தெரிவித்துள்ளது.

Casmo Volunteers அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கன்னி முயற்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...