வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாய்மொழியான கேள்வி -பதில்கள் அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் சில மாதங்களில் எரிபொருள் கோட்டா முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
அடையாளம் காணப்பட்ட முச்சக்கர வண்டிகளின் தரவுகள் கணினியில் உள்ளிடப்பட்டவுடன் முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.