மறைந்த அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாவட்ட பிரதான சங்க தலைவர் கலாநிதி பல்லேகம ஸ்ரீநிவாச தேரரின் இறுதிக்கிரியைகளை பூரண அரச அனுசரணையுடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நாட்டிலுள்ள மகா சங்கத்தினரிடையே முக்கிய பங்காற்றிய வணக்கத்திற்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச தேரர், ரஜரட்ட மக்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரினதும் நலனுக்காக தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்த சங்கப் பிதாவாகும்.
தற்போது தகனக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை 22ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.