இலங்கைக்கான எரிபொருளை பெற கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்காக ரஷ்ய நிதியமைச்சகத்துடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
குறிப்பாக இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு எரிபொருளைப் பெறுவதற்கு இவ்வாறான கடன் வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் குறித்த அறிக்கையின் படி, கடன் வரியைப் பெறுவதற்கான செயல்முறை மற்றும் எரிபொருளைப் பெறும் முறை குறித்து ரஷ்ய கூட்டமைப்பின் நிதி அமைச்சகத்துடன் நீண்ட விவாதம் நடந்தது.
இக்கலந்துரையாடலில் ரஷ்ய பிரதி நிதியமைச்சர் மக்சிமோவ் தைமூர், ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் லெவன் ஜகார்யன் மற்றும் நிதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
வரவிருக்கும் மாதங்களில் நியாயமான விலையில் போதுமான பெட்ரோலிய விநியோகத்தை இலங்கைக்கு கிடைப்பதை கடன் வரி ஏற்பாடு உறுதி செய்யும் என்று இலங்கை தூதரகம் நம்புகிறது.