அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்களின் முற்போக்கான திருத்தம் என்பதால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
22வது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக அல்ல, திருத்தத்திற்கு வாக்களிக்கின்றோம் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“அரசாங்கத்தை பலப்படுத்தவே நாங்கள் திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம் என்று சிலர் கூறலாம். மக்கள் தரப்பில் முற்போக்கான திருத்தம் என்பதாலேயே நாங்கள் திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம்,” என்றார்.
அரசியலமைப்பு திருத்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் மாத்திரம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாது எனவும் உரம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
22A ஜனநாயகம், பொது சேவை மற்றும் ஊழல் நிறைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.