போலி ஒன்லைன் வியாபாரம் ஊடாக 56 இலட்சம் ரூபா மோசடி செய்த 23வயது இளைஞர் கைது!

Date:

இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களை மலிவான விலையில் வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 23 வயதான ஹபராதுவ பிரதேசத்தைச் சேர்ந்த இணைய தள வடிவமைப்பாளர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) டிஜிட்டல் தடயவியல் ஆய்வக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் தொலைக்காட்சி, மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்வதாகக் கூறி முகநூல் பதிவுகள் ஊடாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், கடந்த 06 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட போலி வியாபாரத்தின் மூலம் 5.6 மில்லியன் ரூபா சம்பாதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 100 பொலிஸ் நிலையங்களில் போலி வியாபாரம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையான தனது 12 நண்பர்களுடன் இணைந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோசடி தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

 

 

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...