இலங்கையில் 4,000க்கும் மேற்பட்ட பொலிஸார் உடல் தகுதியற்றவர்கள்!

Date:

இலங்கை பொலிஸில் 4,000 க்கும் மேற்பட்ட பொலிசார் கடமையாற்றுவதற்கு உடல் தகுதியில்லாதவர்கள் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

நீண்டகாலமாக தரமான சுகாதார நிலையில் இல்லாத சுமார் 4,000 பொலிஸார் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

எனவே நீண்ட காலமாக தரம் வாய்ந்த சுகாதாரம் இல்லாத பொலிஸாரை பணி நீக்கம் செய்வது தொடர்பில் தேவையான யோசனையை தயாரித்து அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு அமைச்சர் டிரான் அலஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைவாக, மருத்துவ தரத்தை பூர்த்தி செய்யாத பொலிஸாரின் சேவையை நீக்குவது தொடர்பில் பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.

பொலிஸ் சேவையில் நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாத பல உத்தியோகத்தர்கள் இருப்பதாகவும் அதனால் மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்து சிரமதான கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வருடத்தில் பெருமளவிலான பொலிஸார் ஓய்வு பெறவுள்ளதாகவும், எனவே இந்த வருடத்தில் சுமார் 16,000 பொலிஸார் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் குழு மேலும் கவனம் செலுத்தியது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...