நவீன விவசாய அறிவு, தகவல் தொழிநுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகளுக்கு தற்காலத்தில் நெதர்லாந்து போன்ற நாடுகளின் முதலீடுகள் இலங்கைக்கு மிக முக்கியமானவையாக அமைவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று அலரி மாளிகையில் புதிய நெதர்லாந்து தூதுவர் பொனீ ஹொர்பச் (Bonnie Horbach) சந்தித்தபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.