உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் ஏனைய பிரஜைகளால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
உத்தேச தேசிய இறைவரி திருத்தச் சட்டமூலத்திற்குள், சில நபர்களால் மாதாந்தம் செலுத்தவேண்டிய வருமான வரியானது, இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.