FIFA World Cup Qatar 2022: பார்வையாளர்களை கவரும் வகையில் நபி அவர்களின் பொன்மொழிகளால் அலங்கரிக்கப்பட்ட பதாகைகள்!

Date:

பீஃபா உலக கால்பந்தாட்டப் போட்டி (Fifa world cup 2022) இம்முறை வளைகுடா நாடான  கத்தார் நாட்டில் வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளது.

அதற்கயை அந்நாட்டு அரசாங்கம் போட்டிகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் கத்தார் பீஃபா ஏற்பாட்டுக் குழுவினர், கத்தார் நாட்டுக்கு உலகெங்கிலும் இருந்து வருகைத் தருகின்ற மக்களை கவரும் வகையில் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போட்டிகளுக்காகவே ஏழு மைதானங்களை கத்தார் கட்டமைத்துள்ளது. 100க்கும் அதிகமான புதிய விடுதிகள், ஒரு புதிய மெட்ரோ, புதிய சாலைகள் ஆகியவையும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி உலக கால்பந்து போட்டியை பார்வையிட வருபவர்களுக்கு நல்ல சிந்தனைகளை தூண்டக்கூடிய வகையில் கட்டார் நாட்டின் கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகள், பாரம்பரியம் போன்ற விடயங்களையும் கட்டார் நாடு ஒரு முஸ்லிம் நாடு என்பதற்கமைய அந்நாட்டு மக்களுடைய மதமாகவிருக்கின்ற இஸ்லாத்தின் கருத்துக்களையும் அனைத்து மக்களுக்கும் தெரிந்துகொள்ளும் வகையிலும் பாதையின் இருமருங்கிலும் பதாகைகள், சுவரோவியங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கூறப்பட்ட மிக அழகான பொன்மொழிகளை இவ்வாறு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் தமிழாக்கத்தை வாசகர்களாகிய உங்களுக்கும் தருகின்றோம்.

1. ஒரு பேரீச்சம் பழத்தை தர்மம் செய்வதன் மூலமாவது நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள், அப்படியில்லாவிட்டால் நல்ல வார்த்தையை பேசுவதன் மூலம் உங்களை நரகத்திலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.

2. பிறர் மீது கருணை காட்டதவர் பிறரால் கருணையோடு நோக்கப்பட மாட்டார்.

3. ஓவ்வொரு நன்மையான செயலும் தர்மம் ஆகும்.

4. தீய எண்ணங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் அது மோசமான பொய் ஆகும். பிறரின் பேச்சுக்களை ஒட்டுக்கேட்காதீர்கள். அவர்களின் குறைகளை துருவி ஆராயதீர்கள், பிறர் மீது பொறாமைக் கொள்ளாதீர்கள், பிறருக்கு எதிராக சதி செய்யாதீர்கள், பிறருடன் கோபம் கொள்ளாதீர்கள்,

5. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியவர் அண்டை வீட்டாருக்கு துன்பம் விளைவிக்காதீர்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியவர் விருந்தாளியை கண்ணியப்படுத்துவாராக, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியவர் நல்ல வார்த்தைகளையே பேசுவாராக அல்லது மௌனமாக இருப்பாராக.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...