பாணந்துறை றோயல் ஆரம்ப பாடசாலையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பாடசாலையை அண்மித்துள்ள பகுதியில் இருந்த வீடு எரிந்ததால் அதில் ஏற்பட்ட புகை, காற்றுடன் கல்லூரி மைதானத்துக்கு வந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளியான புகை மூட்டத்தினால் இம்மாணவர்கள் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மாணவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும் , மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.