(File Photo)
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த வருடத்தில் 53 வருடங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், அதே 53 வருட காலப்பகுதியில் மசகு எண்ணெய் கப்பல், எண்ணெய் தரையிறக்கப்படாமல் இருப்பது இதுவே முதல் சந்தர்ப்பம் எனவும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கப்பலுக்கான தாமதக் கட்டணமாக 79 இலட்சம் டொலர்களுக்கு மேல் அதிகளவில் பணமாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ரஷ்ய நிறுவனமான ‘எக்போ’ நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல், மசகு எண்ணெய் இறக்கப்படாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கப்பலில் 99,000 மெட்ரிக் டன் மசகு எண்ணெய் இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.