கந்தகாடு கைதி ஒருவர் பலி!

Date:

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி வெலிகந்த திரிகோண கந்த காட்டில் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இவரை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல நாட்களாக உணவருந்தாமல் இருந்த அவர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளார்.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் புனர்வாழ்விற்காக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஏற்பட்ட குழப்பத்தின் போது கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...