இன்றைய வானிலை அறிவிப்பு!

Date:

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் பெரும்பாலும் நவம்பர் 19 ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இலங்கையின் வடக்குக் கரையை அண்மிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா: போருதோட்டையில் ஆரம்பம்

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள்...

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...