ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்ட விவகாரத்தில் ரொனால்டோவுக்கு ரூ.50 இலட்சம் அபராதமும், 2 உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
கடந்த சீசன், பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் போது, எவர்டன் நகரில் ரசிகர் கையில் இருந்த செல்போனை வேண்டுமென்ற தட்டிவிட்டதற்காக 50 ஆயிரம் பவுண்ட் (ரூ. 49. 4 இலட்சம்) அபராதமும், கிளப் ஆட்டங்களில் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து இங்கிலாந்து கால்பந்து வாரியம் அறிவித்துள்ளது.
சமீபத்தில், ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார்.
இந்த தடை பிபா உலகக்கோப்பையில் செல்லாது. இதுகுறித்து இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஒரு சுயாதீன ஒழுங்குமுறை ஆணையம் அவரது நடத்தை முறையற்றது மற்றும் வன்முறையானது என அடுத்தடுத்த விசாரணையின் போது கண்டறிந்து, இந்தத் தடைகளை விதித்தது” என குறிப்பிட்டுள்ளது.