கத்தாரில் பரவும் ஒட்டகக் காய்ச்சல்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Date:

வளைகுடா நாடான கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு அந்நாட்டில் ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது.

இந்தாண்டு உலகக் கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 20ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கிய இப்போட்டிகள் டிசம்பர் 18ஆம் வரை நடைபெறுகின்றன.

உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 இலட்சம் மக்கள் கத்தார் வருகை தந்துள்ளனர். அதேபோல், கத்தார் நாட்டிலும் 28 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். எனவே, கத்தாரில் சுமார் 40 இலட்சம் மக்கள் திரண்டிருக்கும் இந்த வேளையில், உலக சுகாதார அமைப்பு அந்நாட்டில் ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நடைபெறும் பிரதான சர்வதேச நிகழ்வு இதுவாகும். பொதுவாக மத்திய கிழக்கு நாடுகள் பாலைவனம் சார்ந்த பகுதிகள் என்பதால் அங்கு ஒட்டகக் காய்ச்சல் பரவல் காணப்படுவது இயல்பு.

ஒட்டகம் போன்ற விலங்குகளில் இருந்து பரவும் இந்த காய்ச்சலுக்கு ‘மெர்ஸ்’எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் முதலில் பதிவான இந்த ‘மெர்ஸ்’ காய்ச்சல் காரணமாக இதுவரை 2,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதேபோல், 935 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, கத்தார் உலகக் கோப்பையை காணச் சென்ற பார்வையாளர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

மேலும்,அந்நாட்டின் சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில்...

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...