உணவு உற்பத்தி மற்றும் பசுமைப் புரட்சிக்கான அரசின் கொள்கைப் பிரகடனத்தின் ஒரு பகுதியாக, பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவு மற்றும் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 4000 மரச்செடிகள் நவம்பர் 23ஆம் திகதி இலவசமாக வழங்கப்பட்டன.
மிகவும் வளமான குச்சவெளி பகுதி விவசாயத்திற்கு பெயர் பெற்றது. இப்பிரதேச மக்களை உணவு உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிப்பதற்காகவும், நாட்டில் நிலவும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக விவசாயப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காகவும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை நிலையானதாகவும் இலாபகரமானதாகவும் மாற்றும் வகையில் பரந்த அனுபவத்துடன் உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த பயிர்ச்செய்கை திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதேச செயலாளர் திரு.கே.குணநாதன் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவிடம் கோரிக்கை விடுத்தார்.