நானுஓயா தோட்ட வரலாற்றில் முதல் பட்டதாரி!

Date:

நானுஓயா கிளாசோ தோட்ட வரலாற்றில் முதல் பட்டதாரியாக புண்ணிய செல்வன் என்ற மாணவர் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

இதனால் நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு தோட்ட இளைஞர் பட்டம் பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் அவர்களுக்கு கல்வி மற்றும் வாழ்வதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் ஆண் பிள்ளைகள் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளிகளாகவும், பெண் பிள்ளைகள் தேயிலை பறிப்பவர்களாகவும் அல்லது  தரமற்ற வேலைகளை  செய்வதை காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளியின் பிள்ளையொன்று பல்கலைக்கழக ஆணை பெற்று பட்டப்படிப்பை நிறைவு செய்தமை அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அனைவருக்கும் கல்வி பெறும் உரிமைக்காக, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி கையில் பெல்ட் அணிந்து விளையாடிய காட்சியை நாம் சமூக ஊடகங்களில் பார்த்திருப்போம்

அதில் ““Education for all”(அனைவருக்கும் கல்வி) என்று கூறப்பட்டிருந்தது.

1 COMMENT

  1. தரமற்ற வேலைகளை செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
    athu enna tharamattra velai goyyala

Comments are closed.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...