விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே இன்று (வெள்ளிக்கிழமை) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது மார்பு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகே கடந்த ஒகஸ்ட் 19ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து வசந்த முதலிகேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.